நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய் வாக்களித்தார்...!


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய் வாக்களித்தார்...!
x
தினத்தந்தி 19 Feb 2022 7:31 AM IST (Updated: 19 Feb 2022 11:58 AM IST)
t-max-icont-min-icon

நிலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது (காலை 7 மணி) தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மக்கள் நீண்ட வரிசையில் இன்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் தற்போது தனது வாக்கை பதிவு செய்துள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு காரில் வந்து நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார். 

வாக்குச்சாவடிக்கு நடிகர் விஜய் வாக்களிக்க வந்தபோது அப்பகுதியில் அவரது ரசிகர்கள் கூட்டமாக குவிந்தனர்.

Next Story