மதுவில் இளநீர் கலந்து குடிக்க தென்னை மரத்தில் ஏறிய வடமாநில தொழிலாளி கீழே விழுந்து பலி


மதுவில் இளநீர் கலந்து குடிக்க தென்னை மரத்தில் ஏறிய வடமாநில தொழிலாளி  கீழே விழுந்து பலி
x
தினத்தந்தி 19 Feb 2022 9:17 AM IST (Updated: 19 Feb 2022 9:17 AM IST)
t-max-icont-min-icon

மதுவில் இளநீர் கலந்து குடிப்பதற்காக தென்னை மரத்தில் ஏறிய வடமாநில தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு.

வாழப்பாடி,

சேலம் மாவட்டம் வாழப்பாடி  சேசன்சாவடியில் உள்ள பழைய இரும்பு கடையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மோட்டூ (வயது30) என்பவர் வேலை பார்த்துவருகிறார். இவர் கடந்த 16-ம் தேதி உறவினர் இறந்துவிட்டதால் ஊருக்கு செல்லவேண்டும் என்று இரும்ப கடை உரிமையாளர் பிரபாகரனிடம்  பணம் பெற்று சென்றுள்ளார்.

ஆனார் இவர் பீகாருக்கு செல்லாமல் தனது உறவினர் கைலுரவிதாஸ் என்பவருடன் சேர்ந்து வெள்ளாளகுண்டம் பகுதியில் உள்ள தனியார் இரும்பு உருக்காலை தொழிலாளர் குடியிருப்பில் தங்கியுள்ளனர்.


இங்கிருந்த இருவரும் கடந்த 17-ல் மது குடித்துடித்து உள்ளனர். அப்போது மதுவில் இளநீர் கலந்து குடித்தால் அதிக போதை ஏறும் என்று கருதி அப்பகுதியிலுள்ள தென்னை மரத்தில் அதிகாலை 1 மணிக்கு மோட்டூ ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தென்னை மரத்திலிருந்து மோட்டூ  கீழே விழுந்துள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த மோட்டூவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். 

இதுகுறித்து மோட்டூவின் அண்ணன் சிவ்ரவிதாஸ் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story