நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்...!


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்...!
x
தினத்தந்தி 19 Feb 2022 9:49 AM IST (Updated: 19 Feb 2022 9:49 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என மொத்தம் 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐடி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் அவர் வாக்களித்தார்.

மனைவி துர்காவுடன் வாக்குச்சாவடிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் நின்று பின்னர் தனது வாக்கை பதிவு செய்தார். 

Next Story