திருப்பூர் மாநகராட்சியில் காலை 9 மணி நிலவரப்படி 7.75 சதவீத வாக்குப்பதிவு


திருப்பூர் மாநகராட்சியில் காலை 9 மணி நிலவரப்படி 7.75 சதவீத வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 19 Feb 2022 10:44 AM IST (Updated: 19 Feb 2022 10:44 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூர் மாநகராட்சியில் காலை 9 மணி நிலவரப்படி 7.75 சதவீத வாக்குப்பதிவு



திருப்பூர் 

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர். அதேபோல் அரசியல் கடசி தலைவர்களும், அதிகாரிகளும், அமைச்சர்களும், திரைப் பிரபலங்களும் தங்களது வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சியில் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி 7.75 சதவீத வாக்குகள் பதிவானது. ஆண்கள் அதிகம் வாக்களித்தனர்.

திருப்பூர் மாநகராட்சி 42-வது வார்டு பார்ப்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 406-வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக வாக்குப்பதிவு 30 நிமிடங்கள் தாமதமானது. புதிய எந்திரம் கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Next Story