நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: சென்னை தி.நகரில் வாக்களித்த சசிகலா


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: சென்னை தி.நகரில் வாக்களித்த சசிகலா
x
தினத்தந்தி 19 Feb 2022 12:44 PM IST (Updated: 19 Feb 2022 12:44 PM IST)
t-max-icont-min-icon

சென்னை தி.நகரில் வாக்கு செலுத்திய சசிகலா ஜெயலலிதா இல்லாமல் முதன்முறையாக வாக்களிப்பது கஷ்டமான சூழலாக உள்ளது என கூறினார்.

சென்னை

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர். அதேபோல் அரசியல் கடசி தலைவர்களும், அதிகாரிகளும், அமைச்சர்களும், திரைப் பிரபலங்களும் தங்களது வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.

சசிகலா சென்னை தியாகராய நகர், வித்யோதயா பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். சென்ற சட்டசபை தேர்தலில் சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. அதனால், அவர் அப்போது வாக்களிக்கவில்லை.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நேர்மையான முறையில் தேர்தலை நடத்த வேண்டும். ஜெயலலிதா இல்லாமல் முதன்முறையாக வாக்களிப்பது கஷ்டமான சூழலாக உள்ளது என கூறினார்.

Next Story