95 வயதிலும் ஜனநாயக கடமையாற்ற ஆர்வத்துடன் வாக்களிக்க வந்த மூதாட்டி


95 வயதிலும் ஜனநாயக கடமையாற்ற ஆர்வத்துடன் வாக்களிக்க வந்த மூதாட்டி
x
தினத்தந்தி 19 Feb 2022 12:57 PM IST (Updated: 19 Feb 2022 12:57 PM IST)
t-max-icont-min-icon

95 வயது மூதாட்டி ஆர்வத்துடன் வந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தார்.

நெல்லை,

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதல் பொதுமக்களும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம திசையன்விளை பகுதியிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு தனது பேத்திகளுடன் வந்த 95 வயது மூதாட்டி தனது வாக்கை பதிவு செய்தார்.

95 வயதிலும் தனது ஜனநாயக கடமையாற்ற மூதாட்டி ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்த நிகழ்வு பலர் தரப்பிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.



 




Next Story