சென்னையில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது விறுவிறுப்பு


சென்னையில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது விறுவிறுப்பு
x
தினத்தந்தி 19 Feb 2022 1:30 PM IST (Updated: 19 Feb 2022 1:30 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது விறுவிறுப்படைந்தது

சென்னை,

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

சென்னையில் சுமார் 11 ஆண்டுகளுக்குப் பின் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி சென்னையில் மந்தமான வாக்குப்பதிவே நடந்துள்ளது. 

சென்னையில் காலை 9 மணி நிலவரப்படி 3.96 சதவீதமும், தாம்பரத்தில் 3.30 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் காணப்படவில்லை. 

எனினும், நேரம் செல்ல செல்ல வாக்குப்பதிவு பகலில் விறுவிறுப்படைந்தது. காலை 11 மணி நிலவரப்படி சென்னையில் 17.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

தொடர்ந்து வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்காளர்கள் அதிக அளவில் வந்துகொண்டிருப்பதால் நண்பகலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story