நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திருவண்ணாமலை மாவட்ட 1 மணி நிலவரம் வெளியீடு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திருவண்ணாமலை மாவட்ட 1 மணி நிலவரம் வெளியீடு
x
தினத்தந்தி 19 Feb 2022 1:59 PM IST (Updated: 19 Feb 2022 1:59 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 மணி வரை பதிவான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலை, 

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 மணி வரை பதிவான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகியுள்ளது.

அதன்படி, திருவண்ணாமலையில் 1 மணி வரை 41.37 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளுக்கு இன்று வாக்கு பதிவு மதியம் 1 மணி வரை பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:-

நகராட்சிகள்

1.திருவண்ணாமலை 32.01சதவீதம்

2.ஆரணி 40.34

3.வந்தவாசி 45.75

4.திருவத்திபுரம் 43.14

பேரூராட்சிகள்

1.தேசூர் 58.95சதவீதம்

2.களம்பூர் 53..24

3.கண்ணமங்கலம் 50 .17

4.கீழ்பென்னாத்தூர் 53 .79

5. பெரணமல்லூர் 66 .34

6.போளூர் 57 .19

7.புதுப்பாளையம் 49. 36

8.சேத்துப்பட்டு 47 .00

9.வேட்டவலம் 45.04

10.செங்கம் 46.00

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் மதியம் 1மணிவரை மொத்தம் 41 .37 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4நகராட்சிகள், ஆலங்காயம், நாட்றம்பள்ளி, உதயேந்திரம் ஆகிய 3 பேரூராட்சிகளில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மதியம் 1 மணி நிலவரப்படி 37 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் எந்த வித அசம்பாவிதங்கள் ஏற்படாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது வருகிறது. திருப்பூர் மாநகராட்சியில் 1 மணி நிலவரப்படி 27.8 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.


Next Story