பயணிகளிடம் அனுமதி பெற்று வாக்களித்த தனியார் பஸ் டிரைவர்


பயணிகளிடம் அனுமதி பெற்று வாக்களித்த தனியார் பஸ் டிரைவர்
x
தினத்தந்தி 19 Feb 2022 2:20 PM IST (Updated: 19 Feb 2022 3:51 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் பஸ்சை நிறுத்தி விட்டு, டிரைவர் ஒருவர் வாக்களித்து உள்ளார்.

சென்னை:

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என மொத்தம் 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் பஸ்சை நிறுத்தி விட்டு, டிரைவர் ஒருவர் வாக்களித்து உள்ளார்.

தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி 8- வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். தனியார் பஸ் டிரைவர். இவர் இன்று  காலை தர்மபுரியில் இருந்து பொம்மிடி வழியாக சேலம் செல்லும் தனியார் பஸ்சை ஓட்டி சென்றார். பொ.மல்லாபுரம் பகுதியில் சென்றபோது சாலையோரத்தில் பஸ்சை நிறுத்தினார். 

பேரூராட்சி தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்து விடுவதாக பயணிகளிடம் தெரிவித்த அவர் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். சற்று நேரத்தில் மீண்டும் பஸ் நிறுத்தப்பட்டு இருந்த இடத்திற்கு வந்தார். அங்கிருந்து பயணிகளுடன் அந்த பஸ் சேலத்திற்கு புறப்பட்டது. தனியார் பஸ்சை இயக்கும்பணியில் இருந்தபோது பயணிகளிடம் அனுமதி பெற்று டிரைவர் வாக்களித்த சம்பவம் அந்த பகுதியில் இருந்தவர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தியது.

Next Story