வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் தொடர்பாக கலெக்டர் ஆலோசனை
வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள், இணைய வழி போட்டிகள் தொடர்பாக கலெக்டர் வல்லவன் ஆலோசனை நடத்தினார்.
வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள், இணைய வழி போட்டிகள் தொடர்பாக கலெக்டர் வல்லவன் ஆலோசனை நடத்தினார்.
கலெக்டர் ஆலோசனை
இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் இணையதளம் வாயிலாக நடைபெறும் வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரி கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான வல்லவன் இன்று ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.
கலெக்டர் அலுவலக கருத்தரங்க அறையில் நடந்த இந்த கூட்டத்தில் வர்த்தகம், திரையரங்கு, ஓட்டல் சங்கம், நாட்டு நலப்பணித்திட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பரிசுத்தொகை
கூட்டத்தை தொடர்ந்து கலெக்டர் வல்லவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் ‘என்னுடைய வாக்குரிமை என்னுடைய எதிர்காலம், ஒற்றை வாக்கின் வலிமை’ என்ற கருத்தை மையமாக கொண்டு இணைய வழி போட்டிகளை மார்ச் 15-ந்தேதி வரை நடத்துகிறது. இந்த போட்டியில் மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்ளலாம்.
வெற்றிபெறுபவர்களுக்கு பரிசுத்தொகை, பரிசுப்பொருள் வழங்கப்படும். மேலும் போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
இணையதளத்தில்...
இதில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் htttp://voterawarenesscontest.in என்ற இணையதள முகவரியில் தங்கள் விவரங்களை பதிவு செய்து அதில் உள்ள வினாடி-வினா, பாட்டுப்போட்டி, காணொளி போட்டி, வாக்களிப்பது தொடர்பான முழக்கம், சுவரொட்டி தயாரித்தல் போன்ற போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் வல்லவன் கூறினார்.
பேட்டியின்போது வருவாய் அதிகாரி செந்தில்குமார் உடனிருந்தார்.
Related Tags :
Next Story