“ஓட்டுக் கேட்டு வந்ததுபோல் மக்களின் தேவை கேட்டும் வரவேண்டும்” - கவிஞர் வைரமுத்து
தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் வாக்கு கேட்டு வந்தது போல், பொதுமக்களின் தேவைகளையும் கேட்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகர்ப்புறஉள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, சென்னை கோடம்பாக்கம் 112-வது வார்டில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் தன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “வெற்றி பெறுவோர் ஓட்டுக் கேட்டு வந்ததுபோல் மக்களின் தேவை கேட்டும் வரவேண்டும் என்பது எங்கள் விருப்பம். வந்தால் அது திருப்பம்” என்று பதிவிட்டுள்ளார்.
கோடம்பாக்கம்
— வைரமுத்து (@Vairamuthu) February 19, 2022
டிரஸ்ட்புரம்
வாக்குச் சாவடியில்
வாக்களித்தேன்
வெற்றி பெறுவோர்
ஓட்டுக் கேட்டு வந்ததுபோல்
மக்களின் தேவை கேட்டும்
வரவேண்டும் என்பது
எங்கள் விருப்பம்;
வந்தால் அது திருப்பம்#LocalBodyElection | #TnLocalBodyElection | #TNElection2022pic.twitter.com/cZt5zeToVj
Related Tags :
Next Story