உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை காணொலி மூலம் நடத்தியது ஏன்?- மு.க.ஸ்டாலின் விளக்கம்


உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை காணொலி மூலம் நடத்தியது ஏன்?- மு.க.ஸ்டாலின் விளக்கம்
x
தினத்தந்தி 20 Feb 2022 12:35 PM IST (Updated: 20 Feb 2022 12:35 PM IST)
t-max-icont-min-icon

தேர்வு முடிவுகள் வந்த பிறகு மாவட்டம் தோறும் வெற்றி விழா கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

திமுக துணை அமைப்புச் செயலாளர் இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நாளை மறுநாள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவு வரவுள்ள நிலையில், மிகப்பெரிய வெற்றியை திமுக பெற உள்ளது.   கொரோனா பரவல் காரணமாக அரசு விதிப்படி நேரடி பிரசாரம் செய்யவில்லை.  தேர்தல் முடிவுக்குப் பின் மாவட்டங்களில் நடைபெறும் வெற்றி விழாக்களில் பங்கேற்பேன்.  கணொலி வாயிலாக பேசியதை மக்களை சந்திக்க தைரியமில்லை என கூறினார்கள்.

கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் காரணமாகவே காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டேன்; தேர்தல் முடிவுக்கு பிறகு மக்களை நேரில் சந்திப்பேன் என்றார்.

Next Story