சென்னை - வார்டு வாரியான வாக்குப்பதிவு வெளியீடு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் 43.65% வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தின் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள், 489 பேரூராட்சிககள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவு பெற்றது. மாநகராட்சி வார்டுகள் 1,369, நகராட்சி வார்டுகள் 3,824 ,பேரூராட்சி வார்டுகள் 7409 என மொத்தம் 12,602 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநிலம் முழுவதும் 60.70% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதில்,அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.86% வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னையில் 43.59% வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்தநிலையில், தமிழகத்திலேயே குறைவாக சென்னை மாநகராட்சியில் வாக்குகள் பதிவான நிலையில் வார்டு வாரியான நிலவரத்தை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
* சென்னை பெருநகர் மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் பதிவான மொத்த வாக்கு சதவிகிதம் 43.65%
* சென்னை மாநகராட்சித்தேர்தலில் பாதி வாக்களார்களுக்கு மேல் வாக்களிக்கவில்லை.
* சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு சில வார்டுகளில் மட்டுமே 60%க்கு மேல் வாக்குகள் பதிவாகி உள்ளன.
* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் 43.65% வாக்குகள் பதிவாகி உள்ளது.
* அதிக பட்சமாக 17-வது வார்டில் 84.58% வாக்குகள் பதிவாகி உள்ளது.
* சென்னையில் மொத்தம் 61,73,112 வாக்களார்கள் உள்ள நிலையில் 26,94,785 பேர் வாக்குபதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story