நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு: மாநில தேர்தல் ஆணையிரிடம் அதிமுக மனு


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு: மாநில தேர்தல் ஆணையிரிடம் அதிமுக மனு
x
தினத்தந்தி 20 Feb 2022 2:49 PM IST (Updated: 20 Feb 2022 2:49 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடைபெற்ற வார்டுகளுக்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமாரிடம் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. சார்பில் செய்தி தொடர்பாளர் பாபுமுருகவேல் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு முதல் வாக்கு எண்ணிக்கை வரை கேமிரா மூலம் கண்காணிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் காலதாமதமின்றி உடனடியாக தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும். காலம் தாழ்த்துவது முடிவுகளை மாற்றி அறிவிப்பதற்கான அழுத்தத்தையும் தேவை இல்லாத சட்ட சிக்கல்களையும் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

முதலில் தபால் வாக்குகளை எண்ணி முடித்து விட்டு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணி வெற்றி பெற்றவர்களை அறிவித்து அவர்களுக்கு உடனே சான்றிதழ்களை வழங்கி அடுத்த வார்டுக்கான வாக்கு எண்ணிக்கையை தொடங்க வேண்டும்.

ஐகோர்ட்டு வழங்கி உள்ள தீர்ப்பின்படி வாக்கு எண்ணிக்கை முடியும்வரை கண்காணிப்பு கேமிரா மூலம் கண்காணிக்க வேண்டும். அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story