போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல முயன்ற வங்க தேச முதியவர் கைது


போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல முயன்ற வங்க தேச முதியவர் கைது
x
தினத்தந்தி 20 Feb 2022 6:13 PM IST (Updated: 20 Feb 2022 6:13 PM IST)
t-max-icont-min-icon

சென்னையிலிருந்ந்து துபாய்க்கு போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற வங்க தேச முதியவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாயிற்கு விமானம் செல்ல இருந்தது. இதில் ஏற வந்த பயணிகளின் பாஸ்போர் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொது திரிபுரா மாநிலம் அகர்தாலா மாவட்ட முகவரியில் இந்திய பாஸ்போர்ட்டுடன் ரிஸ்வான்கான்(57) என்பவர் வந்தார். 

இவர் மீது சந்தேகம் கொண்ட குடியுரிமை அதிகாரிகள் விசாரித்த போது, அவர் வங்க தேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு வந்த ரிஸ்வான்கான் திரிபுராவில் தங்கி இருந்தார். பின்னர் ஏஜெண்டுகள் முலம் போலி பாஸ்போர்ட் வாங்கி கொண்டு சென்னையிலிருந்து விமானம் மூலம் துபாய்க்கு செல்ல இருந்துள்ளார். இந்நிலையில் அவரது விமான பயணத்தை ரத்து செய்த குடியுரிமை அதிகாரிகள் மேல் விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Next Story