மனைவியை உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்த கணவன் கைது..!


மனைவியை உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்த கணவன் கைது..!
x
தினத்தந்தி 20 Feb 2022 8:57 PM IST (Updated: 20 Feb 2022 8:57 PM IST)
t-max-icont-min-icon

கணவன் மனைவி இடையேயான சண்டையில் மனைவியை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் தாலுகா ஜவ்வாது மலை புதூர்நாடு பெரும் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த காளியப்பன் (வயது38), கோவையில் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 30). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் மற்றும் 1 பெண் குழந்தை உள்ளது.

கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் கோவையில் இருந்து நேற்று இரவு காளியப்பன்  ஊருக்கு வந்ததுள்ளார். இருவருக்கும் இடையே வழக்கம் போல் வாய் தகறாறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த காளியப்பன் வீட்டிலிருந்த உருட்டுக்கட்டை எடுத்து மனைவி புவனேஸ்வரி தலையில் அடித்து உள்ளார். அதில் புவனேஸ்வரி மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். 

இதை கண்ட பக்கத்து வீட்டினர் புவனேஸ்வரியின் குடும்பத்திற்க்கு தெரிவித்தனர். இது குறித்து புவனேஸ்வரியின் தாய் காளியம்மாள் திருப்பத்தூர் தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காளியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மனைவியை கணவனே உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story