காரைக்கால் வாரச்சந்தையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
காரைக்கால் வாரச்சந்தையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து எடை அளவில் முறைகேடு செய்த தராசுகளை பறிமுதல் செய்தனர்.
காரைக்கால் வாரச்சந்தையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து எடை அளவில் முறைகேடு செய்த தராசுகளை பறிமுதல் செய்தனர்.
கலெக்டருக்கு புகார்
காரைக்கால் திருநள்ளாறு சாலை- பிள்ளைத் தெருவாசல் சந்திப்பில் உள்ள நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெற்று வந்தது. மழை காலங்களில் இந்த பகுதி சேறும் சகதியுமாக மாறியதால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்திற்கு வாரச்சந்தை தற்காலிகமாக இட மாற்றம் செய்யப்படது.
இந்த சந்தையில் வியாபாரிகள் பயன்படுத்தும், தராசு மற்றும் எடை கற்களின் எடை அளவு குறைவாக இருப்பதாகவும், முறையாக முத்திரைபெறப்படவில்லை எனவும் பொதுமக்களிடம் இருந்து மாவட்ட கலெக்டருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
தராசுகள் பறிமுதல்
மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா உத்தரவின்பேரில், தாசில்தார் பொய்யாதமூர்த்தி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் இன்று நடந்த வாரச்சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், சுமார் 10 கடைகளில் எடை சரியில்லாத தராசுகளும், முத்திரை இல்லாத எடை கற்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இது போன்ற ஆய்வுகள் அடிக்கடி நடத்தப்படும் எனவும், மீண்டும் தவறு செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
Related Tags :
Next Story