அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 2 லட்சம் மோசடி


அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 2 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 20 Feb 2022 10:47 PM IST (Updated: 20 Feb 2022 10:47 PM IST)
t-max-icont-min-icon

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த அழகுநிலைய உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த அழகுநிலைய உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ரூ.2 லட்சம்
புதுச்சேரி தொண்டமாநத்தம் பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது நண்பர் வேல்முருகன். இவர் மூலம் முருகனுக்கு பூமியான்பேட்டை சேர்ந்த புஷ்பராஜ் உடன்   கடந்த  2018-ல் பழக்கம் ஏற்பட்டது. 
புஷ்பராஜ் கிழக்கு கடற்கரை சாலையில் அழகுநிலையம் நடத்தி வருகிறார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் பெரிய பொறுப்பில் இருப்பதாகவும், என்னால் அரசு வேலை வாங்கித்தர முடியும் என்றும் கூறியுள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய முருகன் தனக்கு வேலை வாங்கித்தர கடந்த 2018-ம் ஆண்டு ரூ.2 லட்சத்தை புஷ்பராஜிடம் வழங்கினார். ஆனால் அவர் கூறியது போல் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி அளிக்கவில்லை.
இதனால் ஏமாற்றம் அடைந்த முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில், 45 நாட்களில் பணத்தை திருப்பி தருவதாக புஷ்பராஜ் உறுதியளித்தார். ஆனால் அவர் குறிப்பிட்ட நாட்களில் பணத்தை கொடுக்கவில்லை.
வலைவீச்சு
இது குறித்து லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் முருகன் மீண்டும் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story