டிக்கெட் எடுக்க சொன்ன கண்டக்டரை கீழே தள்ளிவிட்ட வட மாநில இளைஞர்கள்..!


டிக்கெட் எடுக்க சொன்ன கண்டக்டரை கீழே தள்ளிவிட்ட வட மாநில இளைஞர்கள்..!
x
தினத்தந்தி 20 Feb 2022 11:08 PM IST (Updated: 20 Feb 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

பேருந்தில் பயணித்த வட மாநில இளைஞர்களை டிக்கெட் எடுக்க சொன்ன போது கீழே தள்ளி விட்டதில் கண்டக்டர் படுகாயம் அடைந்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் இருந்து திருச்சி மாவட்டம், திருப்பட்டூருக்கு ஓரு அரசு டவுன் பஸ் பயணிகளை ஏற்றி கொண்டு இன்று மாலை புறப்பட்டது. அப்போது சிறுவாச்சூர் பஸ் நிறுத்தத்தில் விஜயகோபாலபுரத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரியும் வட மாநில இளைஞர்கள் சிலர் பஸ்சில் ஏறியுள்ளனர். 

அவர்களில் 4 பேர் மட்டும் டிக்கெட் எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் மற்றவர்களளிடம் கண்டக்டர் ஆறுமுகம் டிக்கெட் எடுக்குமாறு கூறினாராம். இதனால் அவர்களுக்கும், கண்டக்ருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பஸ்சின் பின்பக்க படிக்கட்டில் நின்று கொண்டிருந்த கண்டக்டரை வட மாநில இளைஞர்கள் கீழே தள்ளி விட்டதில் காயமடைந்தார். 

இதையடுத்து கண்டக்டர் ஆறுமுகம் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story