ரூ 3 லட்சம் கட்டுமான பொருட்கள் திருட்டு


ரூ 3 லட்சம் கட்டுமான பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 20 Feb 2022 11:43 PM IST (Updated: 20 Feb 2022 11:43 PM IST)
t-max-icont-min-icon

கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கட்டுமான பொருட்கள் திருட்டு
புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையின் 4-வது தளத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக காப்பர் கம்பிகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று காலை அங்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர்.
அப்போது அங்கிருந்த காப்பர் கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் மாயமாகி இருந்தது. மர்ம நபர்கள் சிலர் அந்த பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவ கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதுதொடர்பாக மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் எலக்ட்ரிக்கல் பிரிவின் இளநிலை பொறியாளர் பிரபுராம்  கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து காப்பர் கம்பிகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story