தனியார் நிறுவன ஊழியர் கடலில் மூழ்கி பலி


தனியார் நிறுவன ஊழியர் கடலில் மூழ்கி பலி
x
தினத்தந்தி 21 Feb 2022 12:29 AM IST (Updated: 21 Feb 2022 12:29 AM IST)
t-max-icont-min-icon

புதுவைக்கு நண்பர்களுடன் சுற்றுலா வந்த பெங்களூரு தனியார் நிறுவன ஊழியர் கடலில் மூழ்கி பலியானார்.

புதுவைக்கு நண்பர்களுடன் சுற்றுலா வந்த பெங்களூரு தனியார் நிறுவன ஊழியர் கடலில் மூழ்கி பலியானார்.
பெங்களூருவை சேர்ந்தவர்
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள உக்லி பகுதியை சேர்ந்தவர் விநாயக் (வயது 26). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பர்கள் 6 பேருடன் புதுவைக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்திருந்தார். இங்கு ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்து பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். இந்த நிலையில் நேற்று காலை விநாயக் மற்றும் அவரது நண்பர்கள் புதுவை தலைமை செயலகம் எதிரே உள்ள செயற்கை மணல் பரப்பு  பகுதிக்கு சென்றனர். 
கடலில் மூழ்கினார்
கடலை பார்த்தவுடன் அனைவருக்கும் குளிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. உடனே அவர்கள் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது கடலில் திடீரென எழுந்த ஒரு ராட்சத அலை விநாயக்கை வாரி சுருட்டிக்கொண்டு உள்ளே இழுத்துச்சென்றது. இதை பார்த்த அவரது நண்பர்கள், அதிர்ச்சி அடைந்து காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். 
அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும்  பொது மக்கள்  கடலில்   இறங்கி விநாயக்கை   காப்பாற்ற முயற்சி செய்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து வந்து, கடலுக்குள் இறங்கி தேடினர். நீண்ட  நேரத்திற்கு   பின்  விநாயக் மீட்கப்பட்டார்.
சாவு
மயங்கிய நிலையில் இருந்த அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி விநாயக் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
விநாயக் சாவு    குறித்து அவரது      பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள்   பெங்களூருவில் இருந்து   புதுவைக்கு வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
சுற்றுலா வந்த இடத்தில் தனியார் நிறுவன ஊழியர் இறந்த சம்பவம் அவரது நண்பர்களிடையே   சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story