மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள புது மண்டப கடைகள் அகற்றம்..!


மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள புது மண்டப கடைகள் அகற்றம்..!
x
தினத்தந்தி 21 Feb 2022 12:14 PM IST (Updated: 21 Feb 2022 12:14 PM IST)
t-max-icont-min-icon

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் புதுமண்டபத்தில் உள்ள சிற்பங்களை பாதுகாக்க அங்குள்ள கடைகளை இந்து சமய அறநிலையத் துறையினர் அகற்றி வருகின்றனர்.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள  400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கலை நயமிக்க  புது மண்டபத்தை பாதுகாக்க இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.  இதனால் அங்குள்ள 300க்கும் மேற்ப்பட்ட கடைகள் படிப்படியாக அகற்றும் பணியில் அறநிலையத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அங்குள்ள தூண்களில் உள்ள சிலைகள், சிற்பங்கள், பல நுணுக்கமான வேலைப்பாடுகளை கொண்டுள்ளதால் அவற்றை காட்சி பொருளாக மாற்றி பாதுகாக்க இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில் புதுமண்டபத்தில் இருந்து அகற்றப்பட்ட கடைகள் அனைத்தும் குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்ற அலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடையை இடமாற்ற செய்வதற்கு அங்குள்ள வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


Next Story