மெரினா கடற்கரை: காரில் இருந்து இறங்கிய மு.க.ஸ்டாலினை பார்த்ததும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆரவாரம்


மெரினா கடற்கரை: காரில் இருந்து இறங்கிய மு.க.ஸ்டாலினை பார்த்ததும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆரவாரம்
x
தினத்தந்தி 21 Feb 2022 1:35 PM IST (Updated: 21 Feb 2022 1:35 PM IST)
t-max-icont-min-icon

சென்னை, மெரினா கடற்கரையில் குடியரசு தின அலங்கார ஊர்திகளை பள்ளி மாணவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் செல்பி எடுத்துக்கொண்டார்.

சென்னை,

டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்கள் அடங்கிய அலங்கார ஊர்திகள், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பார்வைக்காக வலம் வந்தன. இதன் முடிவில் சென்னை மெரினா கடற்கரையில் வரும் 23-ந் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு அலங்கார ஊர்திகள் வைக்கப்பட்டுள்ளன.

கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் இந்த அலங்கார ஊர்திகளை கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவ, மாணவிகள் இன்று அலங்கார ஊர்திகளை பார்வையிட்டனர். அப்போது சென்னை கோட்டைக்கு சென்ற போது அந்த வழியாக வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காரில் இருந்து இறங்கி பள்ளி மாணவ, மாணவிகளுடன்  கலந்துரையாடினார். 

பின்னர் அலங்கார ஊர்திகளின் பின்னணியில் மாணவ, மாணவிகளுடன் முதல்-அமைச்சர் செல்பி எடுத்துக் கொண்டார். இதை அங்கிருந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவ - மாணவிகளுடன் உரையாடியது, அவர்களுடன் செல்பி எடுத்தது அவரது எளிமை அங்கிருந்த பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.

Next Story