"கோவில் ஊழியர்கள் நியமனம் - சட்ட விரோதம் இல்லை" - சென்னை ஐகோர்ட்டு


கோவில் ஊழியர்கள் நியமனம் - சட்ட விரோதம் இல்லை - சென்னை ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 21 Feb 2022 3:01 PM IST (Updated: 21 Feb 2022 3:58 PM IST)
t-max-icont-min-icon

அறங்காவலர்கள் இல்லாத கோவில்களில் நலனுக்கான அயல்பணியில் தற்காலிக ஊழியர்களை நியமித்தது சட்ட விரோதம் இல்லை என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள கோவில்களில் அறநிலையத்துறை ஊழியர்களை அயல்பணியாக கோவில் பணி ஊழியர்களாக நியமித்ததை எதிர்த்து டி.ஆர். ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் இந்த கோவில் ஊழியர்களை நியமிப்பதற்கு அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

அறநிலையத்துறை ஆணையருக்கு அதிகாரம் இல்லை. தமிழகத்தில் 19,000 கோவில்களில் அறங்காவலர்கள் இல்லை என தெரிவித்தார். பின்னர், அரசு சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக நியமன நடைமுறைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் . அறங்காவலர்கள் நியமன நடைமுறைகள் துவங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அறங்காவலர்கள் இல்லாத கோவில்களின் நலனுக்காக அறநிலையத்துறை ஊழியர்கள் கோவில் ஊழியர்களாக அயல்பணியில் நியமனம் செய்யப்பட்டனர் என கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதி கோவில்களில் பல ஆண்டுகளாக அறங்காவலர்களை நியமிக்காதது துரதிருஷ்டவசமானது. அறங்காவலர்கள் நியமனத்தை நீதிமன்றம் கண்காணிக்கிறது. விரைவில் நியமிக்கப்படுவார்கள் என நம்புகிறோம்.

அறங்காவலர்கள் இல்லாத கோவில்களில் நலனுக்கான அயல்பணியில் தற்காலிக ஊழியர்களை நியமித்தது சட்ட விரோதம் இல்லை என நீதிபதி தெரிவித்தார்.

Next Story