தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக இந்திய தேர்தல் ஆணையத்தை டேக் செய்து பதிவிட்ட அண்ணாமலைக்கு வந்த பதில்


தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக இந்திய தேர்தல் ஆணையத்தை டேக் செய்து பதிவிட்ட அண்ணாமலைக்கு வந்த பதில்
x

திமுக தேர்தலில் முறைகேடு செய்ததாக இந்திய தேர்தல் ஆணையத்தை டேக் செய்து வீடியோ பதிவிட்ட அண்ணாமலைக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம் ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்ட சென்னை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், நேற்று முன்தினம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பண விநியோகம் செய்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு, 
திமுக அரசு தேர்தல் நாளன்று எதுவும் நடக்கவில்லை என்று கூறுகின்றார்கள்.இந்தக் காணொளி, தமிழகத்திலே எந்த அளவுக்கு ஆளும் கட்சி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயகத்தை நசுக்கி இருக்கிறார்கள் என்பது தெரியும்!
இந்திய தேர்தல் ஆணையம் தன் கண்களை மூடிக் கொள்ளாமல் நாளையாவது விழிப்புடன் இருப்பார்களா? என பதிவிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தை டேக் செய்திருந்தார்.

அண்ணாமலை பதிவிட்டுள்ள வீடியோ மற்றும் கருத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. டுவிட்டரில் அளித்த பதிவில், கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தாது. இந்த தேர்தலை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி மாநில தேர்தல் ஆணையம் தான் நடத்தும். நீங்கள் உங்களது சந்தேசம், புகார் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தை தொடர்பு கொள்ளுங்கள்’ என தெரிவித்துள்ளது.



Next Story