வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு ஆயுதபோலீஸ் பாதுகாப்பு: டிஜிபி சைலேந்திரபாபு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 Feb 2022 8:08 PM IST (Updated: 21 Feb 2022 8:08 PM IST)
t-max-icont-min-icon

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது போலீஸ் பாதுகாப்புப்பணிகள் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு கூறுகையில், 

தமிழகத்தில் நடைபெற்றுமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. இதற்காக 40,910 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் அனைத்து  மையங்களும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். தேவையான இடங்களில் ட்ரோன் மூலமும் கண்காணிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.


Next Story