சாராய கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி கைது


சாராய கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி கைது
x
தினத்தந்தி 21 Feb 2022 11:14 PM IST (Updated: 21 Feb 2022 11:14 PM IST)
t-max-icont-min-icon

சாராய கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். மேலும் கூட்டாளிகள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

சாராய கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். மேலும் கூட்டாளிகள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மாமூல் கேட்டு மிரட்டல்
வில்லியனூர் கலைவாணர் நகரை சேர்ந்தவர் சோலைமணி (வயது 50). இவர் வில்லியனூரை அடுத்த அக்ரஹாரம் பகுதியில் அரசு அனுமதியுடன் சாராய கடை நடத்தி வருகிறார். நேற்று  இரவு இவரது கடைக்கு கடலூர் மாவட்டம் கிளிஞ்சிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (30) என்பவர் தனது கூட்டாளிகளான பிரதாப், ராமமூர்த்தி ஆகியோருடன் வந்தார்.
பின்னர் அவர்கள் அங்கு சாராயம் விற்றுக் கொண்டிருந்த ஊழியரிடம் ஓசியில் 5 சாராய பாக்கெட்டை வாங்கி குடித்துள்ளனர். பின்னர் கடையில் இருந்த உரிமையாளர் சோலைமணியிடம் தினமும் எங்களுக்கு மாமூலாக சாராய பாக்கெட்டுகள் தர வேண்டும் என்று மிரட்டி விட்டு தப்பி சென்றனர்.
ரவுடி கைது
இதுகுறித்து மங்கலம் போலீஸ் நிலையத்தில் சோலைமணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய  ராமச்சந்திரனை கைது செய்னர். மேலும் அவரது கூட்டாளிகள் பிரதாப், ராமமூர்த்தி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் மீது தமிழக போலீஸ் நிலையங்களில் மணல் திருட்டு வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது. ரவுடி பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story