கடலில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி
நண்பர்களுடன் சுற்றுலா வந்தபோது தனியார் நிறுவன ஊழியர் கடலில் மூழ்கி பலியானார்.
நண்பர்களுடன் சுற்றுலா வந்தபோது தனியார் நிறுவன ஊழியர் கடலில் மூழ்கி பலியானார்.
தனியார் நிறுவன ஊழியர்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காளிநாதம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் மதன்குமார் (வயது 18). அங்குள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் மதன்குமார் தன்னுடன் வேலை செய்யும் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் நேற்று புதுவைக்கு சுற்றுலா வந்தார். பல்வேறு இடங்களை பார்வையிட்ட அவர்கள் புதுவை கடற்கரை சாலையில் பழைய துறைமுகம் அருகே வந்தனர்.
பின்னர் அங்கு அவர்கள், கடலில் இறங்கி உற்சாக குளியல் போட்டனர். அப்போது எழுந்த ராட்சத அலையில் மதன்குமார் இழுத்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் கூச்சல் போட்டனர். உடனே அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்க முயன்றனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. அதற்குள் மதன்குமார் கடலில் மூழ்கினார்.
பிணமாக மீட்பு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒதியஞ்சாலை போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்துக்கு பிறகு அவரை பிணமாக மீட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா வந்த இடத்தில் கடலில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சக நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story