கட்டுமான பொருட்கள் திருடிய 2 பேர் சிறையில் அடைப்பு
கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டுமான பொருட்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் 4-வது தளத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக காப்பர் கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள காப்பர் கம்பிகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் காப்பர் கம்பிகளை திருடியது பட்டானூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 28), குறிஞ்சி நகரை சேர்ந்த மதிவாணன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 2 பேரின் உறவினர் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது அங்கு சென்ற மணிகண்டன், மதிவாணன் ஆகிய 2 பேரும் கல்லூரியின் 4-வது மாடிக்கு சென்று காப்பர் கம்பிகளை வெட்டி சாக்குமூட்டையில் கட்டி கொண்டு திருடிச்சென்றது தெரியவந்தது.
பின்னர் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story