புதுச்சேரியில் நிதி நெருக்கடியா


புதுச்சேரியில்  நிதி நெருக்கடியா
x
தினத்தந்தி 21 Feb 2022 11:58 PM IST (Updated: 21 Feb 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் நிதி நெருக்கடியா? என்ற கேள்வி நிதித்துறைச் செயலாளரின் சுற்றறிக்கையால் எழுந்துள்ளது.

புதுவையில் நிதி நெருக்கடியா? என்ற கேள்வி நிதித்துறைச் செயலாளரின் சுற்றறிக்கையால் எழுந்துள்ளது.
நிதி நெருக்கடி
புதுவையில் ஆண்டுதோறும் நிதி ஆண்டின் இறுதியில் அதாவது பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பணிகளுக்கான உத்தரவு வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு துறையிலும் உள்ள நிதியின் அடிப்படையில் பணிகள் வழங்கப்படும்.
ஆனால் நடப்பு நிதி ஆண்டில் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையில் 40 சதவீதம் வரை மட்டுமே சில துறைகளில் செலவழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போதிய வருவாய் இல்லாததால் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவிட முடியாமல் போனதாக தெரிகிறது. 
இதற்கிடையே நிதித்துறை செயலாளரின் சுற்றறிக்கையால் புதுவையில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
நிதித்துறை ஒப்புதல்
இதுதொடர்பாக நிதித்துறைச் செயலாளர் பிரசாந்த் கோயல் அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள குறிப்பாணையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு துறைகளில் நிதி தொடர்பான எந்த உத்தரவுகளையும் வழங்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட துறையானது நிதித்துறையின் முன் ஒப்புதலை பெறவேண்டும். இதேபோல் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் நீண்டகால திட்டங்களும் முன் அனுமதியை பெற வேண்டும். இவ்வாறு அந்த குறிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.

Next Story