தேர்தல் முடிவுகளை இணையதளம் மூலம் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்
தேர்தல் முடிவுகளை இணையதளம் மூலம் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்கள் http://tnsec.tn.nic.in என்ற மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலம் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story