மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு: பள்ளி விடுதியில் சி.பி.ஐ. அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை
மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு தொடர்பாக மைக்கேல்பட்டி பள்ளி விடுதியில் சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் நேற்று 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
தஞ்சாவூர்,
அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகள் லாவண்யா(வயது 17). இவர், தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் மாணவி லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி போலீசார், பள்ளி விடுதி வார்டன் சகாயமேரியை கைது செய்தனர்.
இந்த நிலையில், விடுதி வார்டன் மற்றும் பள்ளி காப்பாளர் தன்னை மதம்மாற வலியுறுத்தியதால் மாணவி விஷம் குடித்து உயிரிழந்தார் என்று மாணவி பேசியதாக ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு
இதுகுறித்து மாணவியின் தந்தை முருகானந்தம், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் இந்த வழக்கு தொடர்பாக தமிழக போலீசார் விசாரணை நடத்தினால் தனக்கு உரிய நியாயம் கிடைக்காது. எனவே சி.பி.சி.ஐ.டி. அல்லது வேறு ஏதாவது அமைப்பின் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். இதற்கிடையில் கடந்த ஜனவரி 31-ந் தேதி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தினர் மைக்கேல்பட்டி பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். அன்றைய தினமே மதுரை ஐகோர்ட்டு இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது.
சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. மாணவியின் தந்தை முருகானந்தம் மற்றும் பள்ளி தலைமை நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுவும் தாக்கல் செய்து இருந்தனர்.
இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தொடரலாம் என கூறியது. இதனையடுத்து சி.பி.ஐ. தரப்பில் 24 பக்கங்கள் கொண்ட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை தொடங்கியது.
சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
இந்த நிலையில் நேற்று சி.பி.ஐ. துணை இயக்குனர் வித்யாகுல்கர்னி தலைமையில் சூப்பிரண்டு நிர்மலாதேவி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரவி, சந்தோஷ்குமார், இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் சி.பி.ஐ.யின் சிறப்பு தடய அறிவியல் நிபுணர்கள் மைக்கேல்பட்டி மாணவியர் விடுதிக்கு வந்து தங்களது விசாரணையை தொடங்கினார்கள்.
நண்பகல் 12.30 மணிக்கு இந்த விசாரணை தொடங்கியது. மாணவியர் விடுதிக்குள் சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் சென்றதும் விடுதி கதவுகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டது. சிறப்பு தடய அறிவியல் நிபுணர்கள் கேமரா மற்றும் வீடியோ கேமரா மூலம் விடுதிக்குள்ளும், விடுதிக்கு வெளியிலும் படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அதை பதிவு செய்தனர்.
3 மணி நேரம் நடந்தது
விடுதி பணியாளர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர், விடுதியில் தங்கி படித்த மாணவிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. தொடர்ந்து 3 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.

Related Tags :
Next Story