தேர்தல் முடிவு இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது: கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை


தேர்தல் முடிவு இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது: கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை
x
தினத்தந்தி 22 Feb 2022 4:33 AM IST (Updated: 22 Feb 2022 4:33 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

சென்னை,

சட்டசபை தேர்தலில் கோவை மண்டலத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. ஒரு இடத்தை கூட கைப்பற்ற முடியவில்லை. அதனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியை எப்படியாவது கைப்பற்றி விடவேண்டும் என்ற நோக்கத்துடன் தி.மு.க.வினர் செயல்பட்டனர்.

தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கோவை மண்டலம் கையை விட்டு போய்விடக்கூடாது என்பதற்காக கடுமையாக செயல்பட்டது. இதற்காக இரு பெரிய கட்சிகளும், வாக்காளர்களுக்கு பணம், சேலை உள்ளிட்ட பரிசு பொருட்களை வாரி வழங்கின.

தேர்தல் ரத்து

எனவே, இந்த தேர்தலை நிறுத்தி, இந்த தேர்தல் முறைகேடு தொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைத்து, விசாரிக்க வேண்டும் என்று கோவை தேர்தல் அதிகாரியிடம் கடந்த 19-ந்தேதி மனு கொடுத்தேன். ஆனால், அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) வாக்குகள் எண்ணப்படுகின்றன, இதில் யார் வெற்றி பெற்றாலும், பணம் கொடுத்து முறைகேடாகத்தான் புனிதமான பதவியில் அமருவார்கள். அதனால், கோவை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும். வாக்குகளை எண்ணி, முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

தடை இல்லை

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

இந்த வழக்கிற்கு பதில் அளிக்க மாநில தேர்தல் ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கோவை மாநகராட்சி தேர்தல் முடிவு இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று கூறியுள்ளனர்.

Next Story