தி.மு.க.வின் அராஜக செயல்களை அ.தி.மு.க. முறியடிக்கும்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வின் அராஜகத்தையும், வன்முறை வெறியாட்டத்தையும், ஜனநாயக படுகொலையையும் தட்டிக்கேட்ட ஜெயக்குமாரை திடீரென்று காவல்துறை கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஜெயக்குமார் ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற மனப்பான்மையோடு, கள்ள ஓட்டு போடவந்த தி.மு.க.வினரை தடுத்து நிறுத்தி இருக்கிறார். இது எந்தவகையில் முறைகேடான செயல். பல ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டப்பேரவை தலைவராகவும், பல்வேறு துறைகளின் அமைச்சராகவும், அரசியலில் மிக மூத்த உறுப்பினராகவும் விளங்குகின்ற ஜெயக்குமார், கள்ள ஓட்டு போடுவதை தடுப்பதற்குண்டான முயற்சியை எடுத்தார்.
பொறுப்புடன் செயல்பட்டார்
கள்ள ஓட்டு போட வந்த ஒருவரை கையும் களவுமாக பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்க அங்கிருந்தவர்கள் முயற்சித்தபோது, அந்த நபரை அடிக்க வேண்டாம் என்று சொல்லி காப்பாற்றி, காவல் துறையிடம் ஒப்படையுங்கள் என்று பொறுப்புடன் செயல்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தது நியாயம் தான் என்பதை தமிழ் நாட்டில் எல்லோரும் ஏற்றுக்கொள்வர்.
தி.மு.க.வின் இந்த அராஜகச் செயல்களையும், முறைகேடாக அ.தி.மு.க.வின் மீது மேற்கொள்ளும் தாக்குதல்களையும், சட்டத்தின் துணைகொண்டு அ.தி.மு.க. எதிர்த்து நிற்கும்; முறியடிக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம். வாக்கு எண்ணிக்கையின்போது தி.மு.க.வினர் காவல் துறையின் உதவியுடன் எந்த அளவிற்கு ஜனநாயக படுகொலையில் ஈடுபடுவார்கள் என்பதற்கு முன்னோட்டமாக ஜெயக்குமாரின் கைது அமைந்திருக்கிறது.
இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story