ஓட்டு எண்ணும் மையத்துக்கு கைக்குழந்தையுடன் வந்த பெண் வேட்பாளர்; போலீசாரால் தடுத்து நிறுத்தம்..!
கன்னியாகுமரி அருகே ஓட்டு எண்ணும் மையத்துக்கு கைக்குழந்தையுடன் வந்த பெண் வேட்பாளரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
முன்னதாக கல்லூரியின் நுழைவுவாயிலில் அதிகாலையில் இருந்தே ஏராளமான வேட்பாளர்களும் அரசியல் கட்சியினரும் திரண்டு இருந்தனர். ஓட்டு எண்ணும் மையத்தில் கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். காலை 7 மணி முதல் கடுமையான சோதனைக்கு பிறகே ஓட்டு எண்ணும் மையத்துக்குள் முகவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
ஓட்டு எண்ணும் மைய முகவர்கள் செல்போன் மற்றும் பேனா போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது. அப்போது கைக்குழந்தையுடன் ஓட்டு எண்ணும் மையத்துக்கு வந்த ஒரு பெண் வேட்பாளரை போலீசார் தடுத்து, கைக்குழந்தையை உள்ளே கொண்டு செல்ல தடை விதித்தனர் . இதைத்தொடர்ந்து அந்த பெண் வேட்பாளர் தான் கொண்டுவந்த கைக்குழந்தையை தனது அண்ணனிடம் ஒப்படைத்துவிட்டு ஓட்டு எண்ணும் மையத்துக்கு சென்றார்.
Related Tags :
Next Story