நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: - முன்னிலை நிலவரம்
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.
சென்னை,
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது.
மாநகராட்சி பகுதியில் 1,369 வார்டுகள், நகராட்சி பகுதியில் 3,824 வார்டுகள், பேரூராட்சி பகுதியில் 7,408 வார்டுகள் என மொத்தம் 12,601 வார்டுகளுக்கு நடந்த இந்த தேர்தலில் மொத்தம் 57,746 பேர் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவு முடிவில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவுக்கு பின்பு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன.
வாக்கு எண்ணும் மையங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு என தனித்தனியாக ஏற்படுத்தப்பட்ட ஸ்ட்ராங்க் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறையில் வார்டு வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டன.
முறைகேடு புகார் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது.
இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு எடுத்து செல்லப்பட்டன. 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அதாவது வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வெளியே, நுழைவு வாயில், ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறை ஆகிய பகுதிகளில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பாதுகாப்பு அறை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் இருந்து வருகின்றனர். இதுதவிர மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் வெளியே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்தல் அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 279 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில்,
* திருநெல்வேலி மாவட்டம் சங்கர்நகர் பேரூராட்சியில் 1வது வார்டு திமுக வேட்பாளர் கிருஷ்ணம்மாள் வெற்றி
* தூத்துக்குடி மாவட்டம் புதூர் பேரூராட்சியில் 1வது வார்டு அதிமுக வேட்பாளர் வெற்றி
* பரமக்குடி நகராட்சி 4வது வார்டில் திமுக வேட்பாளர் சர்மிளா ராணி வெற்றி
* திருவாரூர்: பேரளம் பேரூராட்சியில் 1வது வார்டில் மார்க்சிஸ்ட், 2வது வார்டில் திமுக வெற்றி
* கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் 1,2 வார்டுகளில் திமுக வெற்றி
* வேடப்பட்டி பேரூராட்சியில் 2 வார்டுகளில் திமுக, 1 வார்டில் அதிமுக வெற்றி
* பழனி கீரனூர் பேரூராட்சியில் 2 வார்டுகளில் திமுக வெற்றி!
* தென்காசி மாவட்டம் பண்பொழி பேரூராட்சி 2வது வார்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி
* 1வது வார்டில் அதிமுக வெற்றி
* கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சியில் 1வது வார்டில் தேமுதிக வேட்பாளர் வெற்றி
* திருச்சி மாவட்டம் கூத்தப்பர் பேரூராட்சி 1வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் கவிதா வெற்றி
* புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சியில் 1வது வார்டில் வேலுச்சாமி, 2வது வார்டில் சுப்ரமணி ஆகிய 2 திமுக வேட்பாளர் வெற்றி
Related Tags :
Next Story