நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்
x
தினத்தந்தி 22 Feb 2022 9:41 AM IST (Updated: 22 Feb 2022 9:41 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது.


சென்னை,

மாநிலம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை விவரம் வருமாறு:- 

* கிருஷ்ணகிரி நகராட்சியில் முதல் 4 வார்டுகளில் தி.மு.க. வெற்றி

* கடலூர் மாநகராட்சியில் 2 வார்டுகளில் தி.மு.க. வெற்றி; 2 வார்டுகளில் வி.சி.க. வெற்றி

* கரூர் மாநகராட்சி 2வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் வடிவேலரசு வெற்றி

* கரூர் மாநகராட்சி 3வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் சக்திவேல் வெற்றி

* நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெகதளா பேரூராட்சி 1 வது வார்டில் தி.மு.க.வும், 2 வது வார்டில் அ.தி.மு.க.வும் வெற்றி

* தேனி மாவட்டம் தாமரைக்குளம் பேரூராட்சி 1-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் வசந்தா வெற்றி

* தேனி மாவட்டம் தென்கரை பேரூராட்சி 1-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் குமரேசன் வெற்றி

* திருப்பூர் மாவட்டம் அவிநாசி பேரூராட்சி 2 வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் கவிதா வெற்றி

* கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பேரூராட்சி 1வது வார்டில் பா.ஜ.க., பொன்மனை பேரூராட்சி 1வது வார்டில் காங்கிரஸ், 

* கன்னியாகுமரி பேரூராட்சி 1வது வார்டில் பா.ஜ.க. மற்றும் 2வது வார்டில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

* செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சி 3வது வார்டில் தி.மு.க. வெற்றி

* தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சி 1,2 -வது வார்டுகளில் அ.தி.மு.க.வும், பாலக்கோடு பேரூராட்சியில் 1,3,4-வது வார்டுகளில் தி.மு.க.வும் வெற்றி

* கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி 1வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் பிரபின் ராஜ்  வெற்றி;   2வது வார்டில் பாஜக வேட்பாளர் ஜெயந்தி வெற்றி

* தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி 4வது வார்டில் அருணகிரி சந்திரசேகர், 5வது வார்டில் ராஜ் குமார் ஆகிய 2 காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி

* திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பேரூராட்சியில் 1 மற்றும் 2 வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி

* தஞ்சை மாவட்டம் வல்லம் பேரூராட்சி 1 வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் செல்வராணி வெற்றி

* அரியலூர் நகராட்சி 1வது வார்டு சுயேட்சை வேட்பாளர் ஜேசுமேரி 9 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* சேலம் மாவட்டம்  அரசிராமணி பேரூராட்சி 1 மற்றும் 2வது வார்டில் திமுக வேட்பாளர்கள் வெற்றி


*  51 வார்டுகளை கொண்ட தஞ்சை மாநகராட்சியின் 8வது வார்டில் திமுக வெற்றி

*  பெரம்பலூர்: லெப்பைக்குடிகாடு பேரூராட்சி 1வது வார்டில் திமுக வெற்றி 

பெரம்பலூர்: லெப்பைக்குடிகாடு பேரூராட்சி 3வது வார்டில் திமுக கூட்டணி வெற்றி 

* ஒரத்தநாடு: 1,2வது வார்டுகளில் அமமுக வெற்றி

*கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூராட்சியின் 1,2வது வார்டுகளில் திமுக வெற்றி 

* அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி 2வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி வேலன் வெற்றி

*மதுரை மாநகராட்சி 14வது வார்டில் திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் அந்தோணி அம்மாள் வெற்றி.

* திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வார்டுகளில் ஒன்றில் திமுக வெற்றி

*திருச்சி 29வது வார்டில் திமுக வேட்பாளர் முஸ்தபா வெற்றி

Next Story