வாக்கு எண்ணும் மையத்தில் ரகளை; போடியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்..!


வாக்கு எண்ணும் மையத்தில் ரகளை; போடியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்..!
x
தினத்தந்தி 22 Feb 2022 10:14 AM IST (Updated: 22 Feb 2022 10:14 AM IST)
t-max-icont-min-icon

போடி நகராட்சியில் ஏற்பட்ட ரகளையால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேனி,

தேனி மாவட்டம் போடி நகராட்சியில் வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில்,  சிலர் திடீரென  ரகளையில் ஈடுபட்டதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு வாக்கு எண்ணிக்கை 20 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

முன்னதாக, சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் வாக்குகள் எண்ணும் பணியில் 1 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.  சென்னை சோழிங்கநல்லூர் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி தொலைந்ததால் கடலூரில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.பின்னர் பூட்டு உடைக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

அதேபோல, கடலூர் மாவட்டம்  மஞ்சகுப்பம் புனித வளனார் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆனது. அங்கு வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி தொலைந்ததால் கடலூரில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 

Next Story