நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நின்று வென்று காட்டிய 22 வயது இளம்பெண்...!
சென்னை 136-வது வார்டில் 22 வயது இளம்பெண் திமுக வேட்பாளர் நிலவரசி துரைராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில் திமுக மற்றும் அதனை கூட்டணி கட்சிகளே முன்னிலை பெற்று வருகிறது.
அதில் சில பகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக,சென்னை மாநகராட்சியில் 12 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.அதன்படி, 1, 8 , 29, 49, 59, 94, 115, 121, 168, 174, 187 ஆகிய வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,சென்னை மாநகராட்சியின் 136 வது வார்டில் போட்டியிட்ட 22 வயதே ஆன இளம் திமுக வேட்பாளர் நிலவரசி துரைராஜ் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து,வெற்றி சான்றிதழை நிலவரசி பெற்றுக் கொண்டார்.
Related Tags :
Next Story