ஒரத்தநாடு பேரூராட்சியை அ.ம.மு.க. கைப்பற்றியது


ஒரத்தநாடு பேரூராட்சியை அ.ம.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 22 Feb 2022 1:43 PM IST (Updated: 22 Feb 2022 1:43 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் பதவியை அ.ம.மு.க. கைப்பற்றியது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட ஒரத்தநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளுக்கு கடந்த பிப்ரவரி 19ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.  

இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் அ.ம.மு.க. 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலா 3 இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளது.

இதில் 8 வது வார்டில் அ.ம.மு.க. தெற்கு மாவட்டச் செயலர் மா. சேகரும், 11 வது வார்டில் இவரது மனைவி திருமங்கை சேகரும் வெற்றி பெற்றுள்ளனர்.

தொடர்ந்து,  மதுரையில் எழுமலை பேரூராட்சி 15வது வார்டில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் அமமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளரை விட 1 வாக்கு அதிகம் பெற்று அமமுக வேட்பாளர் பக்ருதீன் வெற்றி பெற்றுள்ளார்.

Next Story