வெற்றி பெற்ற பின் திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளர்!


வெற்றி பெற்ற பின் திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளர்!
x
தினத்தந்தி 22 Feb 2022 3:52 PM IST (Updated: 22 Feb 2022 3:52 PM IST)
t-max-icont-min-icon

மதுரை மேலுர் நகராட்சி 9-வது வார்டில் வென்ற அதிமுகவின் அருண் சுந்தர பிரபு திமுகவில் இணைந்தார்.

மதுரை,

தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களது வெற்றியை பதிவு செய்து வரும் நிலையில், மதுரை மேலூர் நகராட்சி 9-வது வார்டில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் அருண் சுந்தர பிரபு வெற்றிக்குப் பின்பு அமைச்சர் மூர்த்தி முன்னிலையில்  திமுகவில் இணைந்துள்ளார். இது அதிமுகவினரிடையே சலசலைப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story