எந்த புகாரும் இல்லாதவாறு நடந்துகொள்ள வேண்டும் - தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை


தொண்டர்களை பார்த்து தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உற்சாகமாக கையசைக்கும் காட்சி.
x
தொண்டர்களை பார்த்து தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உற்சாகமாக கையசைக்கும் காட்சி.
தினத்தந்தி 22 Feb 2022 7:02 PM IST (Updated: 22 Feb 2022 7:44 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றிருக்கும் தி.மு.க.வினருக்கு எனது வாழ்த்துகள். அதேவேளை எனது பனிவான, உரிமை கலந்த வேண்டுகோள் என்னவென்றால், இந்த வெற்றியை ஆடம்பரமாக அல்லாமல் அமைதியாக கொண்டாட வேண்டும். 

மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். மக்களுக்கு நீங்கள் உண்மையாக இருக்கவேண்டும், உழைக்கவேண்டும், பாடுபட வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கவேண்டும். உங்கள் மீது எந்த புகாரும் வராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 

அதை நான் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருப்பேன். யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன்” இவ்வாறு அவர் கூறினார்.

Next Story