கர்நாடகத்தில் புதிதாக 767 -பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 767 -பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 22 Feb 2022 8:36 PM IST (Updated: 22 Feb 2022 8:36 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் இன்று 58 ஆயிரத்து 459 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பெங்களூரு,

கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் இன்று 58 ஆயிரத்து 459 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 767 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் 552 பேர் உள்ளனர். 

மாநிலத்தில் வைரஸ் தொற்றுக்கு 29 பேர் உயிரிழந்தனர். இதில் பெங்களூருவில் 14 அடங்குவர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 845 ஆக அதிகரித்துள்ளது. 

ஒரே நாளில் 1,692 பேர் குணம் அடைந்தனர். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 1.31 ஆக உள்ளது. உயிரிழப்பு விகிதம் 3.78 ஆக இருக்கிறது’ இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story