தமிழகத்தில் 3வது மிக பெரிய கட்சியாக உருவெடுத்து உள்ளது பா.ஜ.க.; அண்ணாமலை பேட்டி
தமிழகத்தில் 3வது மிக பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்து உள்ளது என அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளிவந்துள்ளன. பா.ஜ.க. மிக பெரிய ஒரு வெற்றியை பெற்றுள்ளது. இதற்கு முன்பு வெற்றி பெறாத இடங்களில் கூட பா.ஜ.க. தடம் பதித்துள்ளது.
நாங்கள் ஒவ்வொரு முக்கு, மூலையிலும் தாமரையை மலர செய்துள்ளோம். தமிழகத்தில் 3வது மிக பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்து உள்ளது. நம்முடைய வேட்பாளர்கள் வெற்றிக்காக கடுமையாக உழைத்த தலைவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் வெற்றி பெறாதபோதும், நாங்கள் பெற்ற வாக்கு சதவீதம் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என கூறியுள்ளார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 12 ஆயிரத்து 838 தொகுதிகளுக்கு 57 ஆயிரத்து 778 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.
தேர்தலில் ஒட்டுமொத்தமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மாநகராட்சிகளில் 52.22 சதவீதம், நகராட்சிகளில் 68.22 சதவீதம், பேரூராட்சிகளில் 74.68 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
ஓட்டுப்பதிவு முடிந்ததும் நேற்று முன்தினம் மாலை மின்னணு எந்திரங்கள் அனைத்தும் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 268 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த மையங்களில் உள் பகுதியிலும், வெளி பகுதியிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டது.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில், தி.மு.க. 21 மாநகராட்சிகளிலும் அதிக வார்டுகளில் வெற்றி பெற்று இருந்தது.
இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன என பா.ஜ.க. குற்றச்சாட்டு கூறியுள்ளது. இதுபற்றி அனைத்து வித புகார்களுடன் சென்னை ஐகோர்ட்டை இன்று அணுக இருக்கிறோம் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, பிப்ரவரி 19ந்தேதி நகர்ப்பற உள்ளாட்சி தேர்தலை தி.மு.க. நடத்திய விதம் வெட்கக்கேடானது. ஒட்டு மொத்த அளவில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை நடந்து உள்ளது. எங்களுடைய அனைத்து புகார்களுடனும், குறிப்பிட்ட பூத்களில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டுக்கு நாங்கள் இன்று செல்ல இருக்கிறோம்.
வாக்கு மையங்களுக்கு வெளியே தி.மு.க. ஆட்கள் நின்று கொண்டனர். இதனால், அவர்களுக்கு பயந்து மக்கள் வாக்களிக்க வெளியே வரவில்லை. வாக்கு சதவீதம் 14% குறைந்துள்ளது. மத்திய இணை மந்திரி எல். முருகன் வாக்கு கூட சிலரால் செலுத்தப்பட்டு உள்ளது. நாங்கள் போராட்டம் நடத்திய பின்னரே அவரை வாக்களிக்க அனுமதித்தனர் என்று முன்பு அவர் கூறினார்.
Related Tags :
Next Story