சீர்காழி நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது


சீர்காழி நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 23 Feb 2022 12:54 AM IST (Updated: 23 Feb 2022 12:54 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது

சீர்காழி:

சீர்காழி நகராட்சியில் உள்ள  24 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு கடந்த 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 11 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று சீர்காழி நகராட்சியை கைப்பற்றியது. அ.தி.மு.க. 3 வார்டுகளிலும், பா.ம.க. 2 வார்டுகளிலும், தே.மு.தி.க.1 வார்டிலும்,  ம.தி.மு.க.  1 வார்டிலும்,  சுயேச்சைகள் 6 வார்டுகளிலும் வெற்றி பெற்று உள்ளன. 

வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் பெற்ற வாக்குகள் விவரம்  வருமாறு:-

1-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)

கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க. ) -161

டேவிட் (தி.மு.க.) -149

ரமேஷ் (சுயே) -123 

பாண்டியன் (தே.மு.தி.க.)-79

2-வது வார்டு (சுயேச்சை வெற்றி)

ரஹ்மத் நிஷா ( சுயே) - 508.

சிராஜுன்னிஸா (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) - 267

ஜரினா பேகம் (அ.தி.மு.க.) 28

3-வது வார்டு  (தி.மு.க. வெற்றி)

கஸ்தூரிபாய் ( தி.மு.க.) - 383

காயத்ரி (அ.தி.மு.க.)  - 284

சுகந்தி (சுயே) - 80

4-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)

ரமாமணி (அ.தி.மு.க.) - 288

விஜயரெங்கன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி)- 214

கண்ணையன்( சுயே) -170

முருக பாரதி (சுயே) -160

5-வது வார்டு  (சுயேச்சை வெற்றி)

கலைச்செல்வி (சுயே) -347

குணவதி (தி.மு.க.) -289

அஞ்சலிதேவி (அ.தி.மு.க.) - 254

பூங்குழலி (சுயே) -103 

6-வது வார்டு  (சுயேச்சை வெற்றி)

பாலமுருகன் (சுயே) - 423.

லட்சுமி (அ.தி.மு.க. ) - 310

தங்கதுரை (தி.மு.க.) -103

செல்வம் ( சுயே) 97

7-வது வார்டு  (சுயேச்சை வெற்றி)

நித்தியா தேவி (சுயே) - 599

மஞ்சுளா (காங்.) - 329

தவமணி (அ.தி.மு.க.) - 83

பிரியா ( பா.ம.க.) -82 

8-வது வார்டு  (அ.தி.மு.க. வெற்றி)

நாகரத்தினம் (அ.தி.மு.க. ) -232

தனவள்ளி (தி.மு.க.) 193 

துர்க்காதேவி (சுயே) 187

9-வது வார்டு  ( தி.மு.க. வெற்றி)

தேவதாஸ் ( தி.மு.க.) - 443

நடராஜன் (சுயே ) - 150

பிரகாஷ் (அ.தி.மு.க.) -129

10-வது வார்டு (பா.ம.க. வெற்றி)

சூரிய பிரபா (பா.ம.க.) - 470

உமாவதி ( தி.மு.க.) - 378

ஹேமலதா (அ.தி.மு.க.) - 241

11-வது வார்டு (சுயேச்சை வெற்றி)

ராஜேஷ் (சுயே) - 240.

கோபி (தி.மு.க.) -192

நாகராஜ் (சுயே) -128

முரளிராஜ் (சுயே) - 87

பாஸ்கர் (அ.தி.மு.க.) - 61 

12-வது வார்டு (தி.மு.க. வெற்றி)

ராமு (தி.மு.க.)  - 239

பாலகுமாரன் (சுயே) 183

சுரேஷ் (அ.தி.மு.க.) -156

13-வது வார்டு (தி.மு.க. வெற்றி)

முபாரக் அலி (தி.மு.க.) 276

காவேரி (சுயே) -156

கமலகிருஷ்ணன் (சுயே) -134

துரைராஜ் (அ.தி.மு.க.) -76 

14-வது வார்டு (சுயேச்சை வெற்றி)

ஜெயந்தி ( சுயே) - 250

சிவப்பிரியா( தி.மு.க.) - 249

அருணா (அ.தி.மு.க.) -191 

15-வது வார்டு  (தி.மு.க. வெற்றி)

சாமிநாதன் (தி.மு.க.) - 254

நடராஜன் (சுயே) -130 

கார்த்திகேயன் (அ.தி.மு.க.) - 114.

16-வது வார்டு (தி.மு.க. வெற்றி)

வள்ளி ( தி.மு.க.) - 461

ஜெயந்தி (அ.தி.மு.க.) -345

அபிராமி (பா.ம.க. ) - 92 

அம்பிகா (சுயே) - 92

17-வது வார்டு (தி.மு.க. வெற்றி)

ரம்யா (தி.மு.க.) - 640

பூங்குழலி  (அ.தி.மு.க.) - 322

18-வது வார்டு (தி.மு.க. வெற்றி)

சுப்பராயன் (தி.மு.க.) - 443

நவநீதன் (பா.ம.க. ) -173

மேக்சிம் ராமமூர்த்தி ( அ.தி.மு.க.) -131

19-வது வார்டு (தி.மு.க. வெற்றி)

ஏ.பி.எஸ். பாஸ்கரன் ( தி.மு.க.) - 406

வினோத் (அ.தி.மு.க.) 314

சரவணன்( பா.ம.க. ) - 58

உமாமகேஸ்வரி  (பா.ஜ.க. ) - 25

முருகேசன் (நாம் தமிழர் கட்சி) - 4

20-வது வார்டு (தே.மு.தி.க. வெற்றி)

ராஜசேகரன் (தே.மு.தி.க.) - 466

மணிவண்ணன் (அ.தி.மு.க.) 195

இளங்கோவன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) -151 

அருண் பாலாஜி (அ.ம.மு.க.) -129

மொரார்ஜி (காங்.) -75

21-வது வார்டு (ம.தி.மு.க. வெற்றி)

முழுமதி (ம.தி.மு.க. )  - 402

அஸ்மா நாச்சியா நாசர் (சுயே) -175 

புஷ்பா (அ.தி.மு.க.) -11

 விஜயகுமாரி( பா.ம.க. ) -10

22-வது வார்டு (பா.ம.க.)

வேல்முருகன் ( பா.ம.க.) - 525

குகன் (தி.மு.க.) -296

23-வது வார்டு (தி.மு.க. வெற்றி)

ரேணுகா தேவி (தி.மு.க.) - 434

நீலா (அ.தி.மு.க.) -194

சுபா (பா.ம.க. ) 169

24-வது வார்டு (தி.மு.க. வெற்றி)

துர்கா பரமேஸ்வரி ( தி.மு.க.) - 183

திரிபுரசுந்தரி (அ.தி.மு.க.) -154

சுமதி (சுயே) -71

சாந்தி (பா.ஜ.க.) - 58.

உமா (பா.ம.க. ) - 8

முன்னதாக வெற்றி பெற்ற 24 பேர்களுக்கும் உதவி கலெக்டர்  நாராயணன், சீர்காழி தாசில்தார் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) இப்ராஹிம் சான்றிதழ் வழங்கினார். அப்போது மேலாளர் காதர்கான், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் செல்லத்துரை, சார்லஸ், பணி மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியன் உள்பட பலர் உடனிருந்தனர். பாதுகாப்பு பணியில் சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் உள்பட ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Next Story