நகராட்சி தேர்தல் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 7 தம்பதிகள் வெற்றி
நகராட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 7 தம்பதிகள் வெற்றி பெற்றுள்ளனர். திருவாரூர் நகராட்சியில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒரு தம்பதி வெற்றி பெற்றனர்.
தேனி,
தேனி அல்லிநகரம் நகராட்சி 10-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ரேணுப்பிரியா வெற்றி பெற்றார். அவரது கணவரும், நகர தி.மு.க. பொறுப்பாளருமான பாலமுருகன் 20-வது வார்டில் போட்டியிட்டார். அவரும் வெற்றி பெற்றார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி 6-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பவித்ரா வெற்றி பெற்றார். இவருடைய கணவர் ஷியாம்ராஜா 40-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதேபோல 29-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கீதா வெற்றி பெற்றார். இவருடைய கணவர் ராதாகிருஷ்ணன் ராஜா 30-வது வார்டு தி.மு.க. வேட்பாளராக களம் கண்டு வெற்றி பெற்றார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சி 14-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக வெங்கடாஜலம் களம் இறங்கினார். இதே போல 1-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக அவருடைய மனைவி உமாமகேஸ்வரி போட்டியிட்டார். தேர்தல் முடிவில் கணவன், மனைவி 2 பேருமே வெற்றி பெற்றுள்ளனர்.
திருவாரூர் நகராட்சி
திருவாரூர் நகராட்சி தேர்தலில் 14-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க.வை சேர்ந்த டி.செந்தில், 9-வது வார்டியில் போட்டியிட்ட இவருடைய மனைவி புவனப்பிரியா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இதேபோல் 1-வது வார்டு பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.கலியபெருமாள், 2-வது வார்டில் போட்டியிட்ட அவரது மனைவி மலர்விழி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
திருத்துறைப்பூண்டி நகராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.எஸ்.பாண்டியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அவரது மனைவி கவிதா, திருத்துறைப்பூண்டி நகராட்சி 3-வது வார்டில் போட்டியிட்ட நிலையில், அ.தி.மு.க. வேட்பாளரை விட 115 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
குமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சியில் தி.மு.க. சார்பில் 23-வது வார்டில் நீரோடி ஸ்டீபனும், 25-வது வார்டில் ஸ்டீபன் மனைவி ராணியும் வெற்றி பெற்றுள்ளனர்.

Related Tags :
Next Story