தாய் திட்டியதால் பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை..!
வேலூரில் தாய் திட்டியதால் மனமுடைந்த ப்ளஸ் 2 மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்,
வேலூர் கொசப்பேட்டை சேர்ந்தவர் ஜான் ஜெயகரன். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு ரொனால்டினோ இமானுவேல் (17) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக ஜெயகரன் இறந்துவிட்டார். இதனையடுத்து சுதா அவரது மகன் மகளுடன் வசித்து வந்துள்ளார். ரொனால்டினோ இமானுவேல் டான் பாஸ்கோ பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து கொண்டு மாலை நேரங்களில் வெல்டிங் வேலைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் சுதா தனது மகனை படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறும் வேலைக்கு செல்ல வேண்டாம் என கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ரொனால்டினோ இமானுவேல் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீடு திரும்பிய சுதா தன் மகன் தூக்கில் தொங்கியதை கண்டு கதறி அழுதார். இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தெற்கு போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story