உடுமலை: தளி பேரூராட்சியில் மலைவாழ்மக்கள் வெற்றி..!


உடுமலை: தளி பேரூராட்சியில் மலைவாழ்மக்கள் வெற்றி..!
x
தினத்தந்தி 23 Feb 2022 10:06 AM IST (Updated: 23 Feb 2022 10:06 AM IST)
t-max-icont-min-icon

முதல் முறையாக வாக்குவுரிமை பெற்று வார்டு கவுன்சிலராக மலை வாழ்மக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

உடுமலை,

தமிழக-கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள உடுமலை வனப் பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கு  75 ஆண்டுகளை கடந்தும் உள்ளாட்சியில் வாக்களிக்கும் உரிமை கிடைக்காமல் இருந்தனர். இந்நிலையில் வார்டு வரையறைக்கு பின்பு தளி பேரூராட்சியின் 16 மற்றும் 17 வது வார்டில்  இந்த ஊர்கள் இணைக்கப்பட்டு கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்தது.

அதன்படி 203 பெண்கள் உள்ளிட்ட 385 வாக்காளர்களை கொண்ட 16 வது வார்டு குருமலை வாக்குச்சாவடியில் 306 வாக்குகள் பதிவானது. 133 பெண்கள் உள்ளிட்ட 234 வாக்காளர்களை கொண்ட 17 வார்டு திருமூர்த்திமலை வாக்குச்சாவடியில் 167 வாக்குகள் பதிவானது.

இதில் குருமலை, மேல்குருமலை மற்றும் பூச்சிக்கொட்டாம் பாறை செட்டில்மெண்ட்டுகளுக்கு உட்பட்ட 16 ஆவது வார்டில் போட்டியிட்ட செல்வன் 32 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

அதே போல் திருமூர்த்திமலை மலைவாழ்மக்கள் செட்டில்மெண்ட் 17 ஆவது வார்டில் போட்டியிட்ட வாணீஸ்வரி 21 வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றி பெற்றனர். 
மலைவாழ் மக்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாக்குவுரிமை பெற்று வார்டு கவுன்சிலர்கள் ஆனது வரலாற்றில் இது முதன் முறை. இவர்கள் இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களாக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story