தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் புவனகிரி பேரூராட்சியை தவிர்த்த மற்ற இடங்களில் தேர்தல் நடத்தை விதிகளை விலக்கி கொண்டது மாநில தேர்தல் ஆணையம்.
சென்னை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தபட்டிருந்தன. இதனிடையே,பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று அதற்கான வாக்கு என்னும் பணிகள் நேற்று முடிவடைந்து,தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில்,மறுவாக்குப் பதிவு நடைபெறும் புவனகிரி பேரூராட்சி பகுதிகள் தவிர மற்ற இடங்களில் பிறப்பிக்கபட்ட தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனிடையே,கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி 4-ம் வார்டு வாக்குச்சாவடி எண் 4 - AVல் பிப்.24ஆம் தேதி மறுவாக்குபதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கையின் போது, இயந்திரம் பழுதானதால்,அங்கு மறுவாக்குபதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story