படுத்து கொண்டே சிகரெட் பிடித்ததால் விபரிதம்..! படுக்கையில் தீ பிடித்து முதியவர் பலி


படுத்து கொண்டே சிகரெட் பிடித்ததால் விபரிதம்..! படுக்கையில் தீ பிடித்து முதியவர் பலி
x
தினத்தந்தி 23 Feb 2022 10:21 PM IST (Updated: 23 Feb 2022 10:21 PM IST)
t-max-icont-min-icon

படுத்து கொண்டே சிகரெட் பிடித்த போது படுக்கையில் தீ பிடித்து முதியவர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 65 ). இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் தனது மகன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று வீட்டில் தனிமையாக இருந்த வேல்முருகன் படுக்கை அறையில் சிகரெட் பிடித்தபடி படுத்து இருந்துள்ளார். அப்போது சிகரெட்டை சரியாக அணைக்காமல் கீழே போட்டுள்ளார்.

இதன் விளைவாக அவர் படுத்திருந்த படுக்கையில் தீப்பிடித்து உள்ளது. பின்னர் கட்டிலில் இருந்த போர்வையின் மீது தீ பிடித்து எரியத் தொடங்கி உள்ளது. 

இதில் கட்டிலில் படுத்திருந்த வேல்முருகன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த அப்பகுதியினர் தீயை அணைக்க முயன்று உள்ளனர். ஆனால் அவர்களால் முடியாததால் பரமக்குடி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைந்து வேல்முருகனின் உடலை  மீட்டு வெளியே  கொண்டுவந்தனர்.

இது குறித்து அறிந்த பரமக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சிகரெட் பிடித்த முதியவர் படுக்கை அறையில் உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. 


Next Story